News March 5, 2025
18 பேர் பலி எதிரொலி: 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில், 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்.15ஆம் தேதி கும்பமேளா செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத அளவிற்கு பயணிகள் குவிந்ததால், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 4, 2025
தங்கம் விலை இப்படி மாறியிருக்கே!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $22 உயர்ந்து, $4,211.56-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.4) மட்டும் சவரனுக்கு ₹160 உயர்ந்து, ₹96,480-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News December 4, 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் BJP செய்யும் சூழ்ச்சி: காங்., MP

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
AVM சரவணன் காலமானார்.. முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி

நேற்று இரவு தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய AVM சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். இந்த செய்தியை கேட்டு துடித்துப்போன ரஜினி, முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். AVM ஸ்டுடியோவின் 3-வது தளத்தில் அவருக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் இன்னும் சற்றுநேரத்தில் அஞ்சலி செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.


