News April 13, 2025
மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
Similar News
News December 6, 2025
காப்பீடு நிறுவனத்தில் ₹97,000 சம்பளம்.. Apply பண்ணுங்க

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ₹96,765 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படவுள்ளது. இப்பணிக்கு வரும் 15-ம் தேதிக்குள் https://orientalinsurance.org.in.careers என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.
News December 6, 2025
12 மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 7 மணி வரை) தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே செல்லும் போது குடையை மறக்காதீங்க. கவனமாக இருங்க மக்களே..
News December 6, 2025
டிசம்பர் 6: வரலாற்றில் இன்று

*1877–தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் முதலாவது இதழ் வெளியானது *1892–சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி பிறந்தநாள் *1935–நடிகை சாவித்திரி பிறந்தநாள் *1956–அம்பேத்கர் நினைவு நாள் *1971–வங்கதேசத்தை அங்கீகரித்த காரணத்தினால் இந்தியா உடனான தூதரக உறவுகளை பாகிஸ்தான் துண்டித்தது *1988–ரவீந்திர ஜடேஜா பிறந்தநாள் *1992–பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் நடந்த கலவரங்களில் 1,500 பேர் உயிரிழப்பு


