News March 20, 2025
5 திருமணம் செய்த நடிகர்

பாலிவுட் வில்லன் நடிகரான மகேஷ் ஆனந்த், அமிதாப் பச்சன், அக்சய்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நைட் கிளப்பில் உண்மையில் அக்சயுடன் கைகலப்பிலும் ஈடுபட்டார். நடிகை ரீனா ராணியின் சகோதரி பார்கா ராய், ரஷ்ய பெண் உள்ளிட்ட 5 பேரை திருமணம் செய்தும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. 57 வயதாகையில் 2019இல் அவர் உயிரிழந்தார். கடைசி காலத்தில் வறுமையில் வாழ்க்கையை கழித்தார்.
Similar News
News March 20, 2025
”ஈ சாலா கப் நம்தே” மனம் திறந்த டிவில்லியர்ஸ்

”ஈ சாலா கப் நம்தே” எனக் கூறுவதை தயவுசெய்து நிறுத்த வேண்டும் என விராட் தன்னிடம் கூறியதாக AB டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி அனுப்பிய மெசேஜை பகிர்ந்துள்ள அவர், இது விராட்டிடம் இருந்து தனக்கு நேரடியாக வந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், நடப்பு IPL சீசனில் NO 18 ஜெர்சி அணியும் வீரர் இருக்கிறார்; RCB கோப்பையை வென்றால், கோலியுடன் சேர்ந்து நானும் கொண்டாடுவேன் எனவும் கூறியுள்ளார்
News March 20, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 20, 2025
மாலத்தீவை வீழ்த்தியது இந்திய அணி

ஃபிபாவின் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில், மாலத்தீவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. மேகாலயாவில் நடைபெற்ற போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் மாலத்தீவை இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக வெற்றி பெறாமல் தவித்த இந்திய அணி தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தப் போட்டியில், ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்த சுனில் சேத்ரி பங்கேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.