News April 9, 2025
IPL-ல் அதிவேக சதமடித்த 5 ஜாம்பவான்கள்

IPL-ல் அதிவேகமாக சதமடித்த 5 வீரர்கள் யார் யார் என பார்க்கலாம். 2013ல் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். யூசுப் பதான் 37 பந்துகளிலும், மில்லர் 38 பந்துகளிலும் சதமடித்து 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதமடித்து 4-வது இடத்தில் உள்ளார். பஞ்சாப் வீரர் பிரியான்ஸ் 39 பந்துகளில் சதமடித்து 5-வது இடத்தில் உள்ளார்.
Similar News
News December 4, 2025
இவரை போல வேறொருவர் உண்டோ!

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை முன்னின்று வழிநடத்திய போதிலும், எப்போதும் எளிமையானவராகவே AVM சரவணன் இருந்துள்ளார். அவர் கை கட்டாமல் நிற்கும் ஒரு போட்டோவை கூட உங்களால் பார்க்க முடியாது. அதே போல, வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அவரின் டிரேட்மார்க். பழகுவதற்கு இனிமையானவர், பந்தா காட்டாத பண்பானவர், உழைப்பில் கடிகாரத்தை முந்துபவர் என இவரது பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். #RIP
News December 4, 2025
உஷாரான செங்கோட்டையன்.. தவெகவில் 3 தலைவர்கள்?

EX MLA சின்னசாமியுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே, இடையில் நுழைந்த செந்தில் பாலாஜி, அவரை தட்டித்தூக்கி திமுகவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதுபோல் இனி நடந்துவிடக் கூடாது என உஷாரான செங்கோட்டையன், சென்னை, டெல்டா, கொங்குவை சேர்ந்த 3 முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News December 4, 2025
தங்கம் விலை இப்படி மாறியிருக்கே!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $22 உயர்ந்து, $4,211.56-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.4) மட்டும் சவரனுக்கு ₹160 உயர்ந்து, ₹96,480-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


