News April 5, 2025
JDU-இல் இருந்து 5 தலைவர்கள் விலகல்

வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவளித்ததால் அதிருப்தியடைந்து, JDU-வில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். JDU-ன் பீகார் மாநில பொதுச் செயலாளர் முகமது சித்திகி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாநவாஸ் மாலிக் உள்ளிட்ட 4 பேர் ஏற்கெனவே விலகினர். இந்நிலையில், இளைஞரணி துணைத் தலைவர் தப்ரீஸ் ஹாசனும் விலகியுள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவது JDU தலைவர் நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 24, 2025
தமிழ்நாட்டில் வாக்களிக்க வெளிமாநிலத்தவர் விருப்பம்

விநியோகம் செய்யப்பட்ட SIR படிவங்களில், 50%-ஐ பூர்த்தி செய்து பெற்றிருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் படிவம் 8-ஐ நிரப்பி தமிழகத்தின் வாக்காளர்களாக இணையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
1.3 கோடி ஆண்டு பழமையான ஆமைக்கு ஷகீரா பெயர்!

புதிய இனம் கண்டறியப்பட்டால் பொதுவாக அறிவியல் முறைப்படி பெயர் வைக்கப்படும். ஆனால், கொலம்பியாவில் உள்ள தடாகோவா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 1.3 கோடி ஆண்டுகள் பழமையான ஆமை படிமத்துக்கு, கொலம்பிய ராப் பாடகி ஷகீராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷகீராவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ஆராய்ச்சியாளர் எட்வின் கேடனாவின் வாக்குறுதியின் பேரிலும் ‘Shakiremys colombiana’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
News November 24, 2025
பட்டியலின மக்களுக்கும் திமுக செய்யும் துரோகம்: அன்புமணி

SC ஆணையிட்டு ஓராண்டாகியும் பட்டியலின சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன் என அன்புமணி கேட்டுள்ளார். இதேபோல வன்னியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கவில்லை என்ற அவர், வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் சமூகநீதி வழங்கக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை எனவும் விமர்சித்துள்ளார். இதனால், அநீதி இழைக்கும் திமுகவுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.


