News January 21, 2025
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த 5 அடுக்கு பாதுகாப்பு, வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். மேலும், வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
Similar News
News March 11, 2026
திருப்பத்தூர்: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

திருப்பத்தூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <
News March 11, 2026
BREAKING: நடிகை ஹன்சிகா விவாகரத்து!

கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா காதலித்து திருமணம் செய்த நடிகை ஹன்சிகா விவாகரத்து பெற்றுள்ளார். எந்தவித ஜீவனாம்சமும் அவர் கணவரை பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் சேர்ந்து வாழ வைக்க குடும்பத்தினர் பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இன்ஸ்டாவில் இருந்து கணவருடனான போட்டோக்களை டெலிட் செய்த ஹன்சிகா, விவாகரத்தை சூசகமாக அறிவித்திருந்தார்.
News March 11, 2026
திமுகவுடன் கூட்டணி.. அதிரடியாக அறிவித்தார்

தொகுதி பங்கீடு பிரச்னையால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவெடுத்துள்ளதாக இன்று தகவல் வெளியானது. தனி சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவெடுத்த நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியதே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தொடர்வதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுகவால் கூட்டணிக்குள் பிரச்னை வராது எனவும் உறுதியளித்துள்ளார்.


