News July 8, 2025
திருச்செந்தூருக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை: சேகர் பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நிகழ்வுக்கு பின் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, சுமார் 5 லட்சம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தந்ததாகவும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார். திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல என்றார்.
Similar News
News July 8, 2025
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர். ஆனால், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இருப்பினும் பஸ்கள், ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பு இருக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
News July 8, 2025
சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
News July 8, 2025
டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: இஸ்ரேல் கடிதம்

USA அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோபல் பரிசு கமிட்டிக்கு கடிதம் அனுப்பி பரிந்துரைத்துள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பிடமும் அக்கடிதத்தை அவர் கொடுத்தார். இதற்கு தகுதியான நீங்கள் நிச்சயம் விருதை வெல்வீர்கள் என்றும் அவர் US அதிபரிடம் கூறினார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.