News February 16, 2025
இல்லத்தரசிகளுக்கு உதவும் ‘5’ கிச்சன் டிப்ஸ்

*கையால் மிளகாயை வெட்டிய பிறகு, எரிச்சலை தடுக்க எண்ணெய், உப்பு வைத்து ஸ்கிரப் செய்யுங்கள் *சமைத்த உணவில் உப்பு அதிகமாக இருந்தால், தோலுரித்த உருளைக்கிழங்கை போடவும் * சிட்ரஸ் பழங்கள், தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் *வெறும் பாட்டிலை மூடி வைக்கும் போது, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும் *சமைத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்த, அதில் 1/4 துண்டு இஞ்சியை போட்டு சமைக்கவும்.
Similar News
News November 23, 2025
Thalaivar 173-ல் சுந்தர் சி-க்கு பதிலாக இவரா?

தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதையடுத்து இயக்குநரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினியையும் கமலையும் சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குநர் ராம்குமார் சொன்ன கதை பிடித்திருப்பதாகவும், அவரே தலைவர் 173-ஐ இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
News November 23, 2025
மக்களை சந்திக்க புறப்பட்டார் விஜய்

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தவெக தலைவர் விஜய், நீலாங்கரை இல்லத்தில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார். விஜய் வருகையையொட்டி, தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குழுவினர், பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஜேப்பியார் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
News November 23, 2025
தேர்தலுக்காக திருமா போடும் ஸ்கெட்ச்!

2021-ல் 6 தொகுதிகள் போட்டியிட்ட விசிக, தற்போது டபுள் டிஜிட் கேட்பதாக கூறப்படுகிறது. அதன்படி செய்யூர், திருப்போரூர், காட்டுமன்னார்கோவில், நாகை, அரக்கோணம், வானூர், புவனகிரி, கள்ளக்குறிச்சி, குன்னம், தருமபுரியின் ஹரூர், ஊத்தங்கரை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஊத்தங்கரையும், ஸ்ரீபெரும்புதூரும் காங்., தொகுதி என்பதால் திமுக தயங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


