News October 14, 2025
தீபாவளிக்கு 5 நாள்கள் விடுமுறை.. ஏன் தெரியுமா?

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவதால், அங்கு 4-5 நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. நாம் அதிகபட்சம் 2 நாளில் தீபாவளி கொண்டாட்டத்தை முடித்து விடுகிறோம். ஆனால், வடமாநிலங்களில் அப்படி என்ன வித்தியாசமாக தீபாவளி கொண்டாடுகிறார்கள்? மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
Similar News
News October 14, 2025
விரிசல் இல்லாத குண்டு குலாப் ஜாமுன்.. இப்படி பண்ணுங்க

தீபாவளிக்கு குலாப் ஜாமுன் செய்யும் போது இந்த குறிப்புகளை பின்பற்றுங்க.. குண்டு குண்டா உடையாமல் சூப்பரா வரும். *மாவை சலித்து பயன்படுத்தவும். *1 ஸ்பூன் நெய் சேர்த்து தண்ணீரை தெளித்து தெளித்து மாவு பிசையவும். *மாவை உள்ளங்கையில் நன்கு அழுத்தி உருட்டவும். *கோலி குண்டு சைஸில் மாவு உருட்டுங்கள். *எண்ணெய் சூடான பிறகு உருண்டையை உள்ளே போட்டு வறுக்கவும். *கிளறிக் கொண்டே இருந்தால் மாவின் உள்ளே நன்கு வேகும்.
News October 14, 2025
அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்: CM ஸ்டாலின்

சென்னையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய CM, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் DCM உதயநிதி செயல்பட்டு வருவதாக பாராட்டியுள்ளார். முதல்வர் கோப்பை போட்டியில் வெல்வோருக்கு கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனவும் CM உறுதியளித்துள்ளார்.
News October 14, 2025
ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு.. தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு, தீபாவளி பரிசாக ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படும் என TN அரசு அறிவித்திருந்தது. பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை சரிபார்த்து வேட்டி, சேலைகளை வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், வயது மூப்பால் பலரின் கைவிரல் ரேகை, கருவிழி மூலம் சரிபார்ப்பது தோல்வியடைய வாய்ப்புள்ளது. அப்படியானவர்களுக்கு அங்கீகாரச் சான்று இருந்தால் வேட்டி, சேலை வழங்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. SHARE