News March 27, 2025
5 நாள்கள் தொடர் விடுமுறை

ஏப்ரல் மாதத்தில் 4 நாள்கள் அரசு விடுமுறை வருவது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதேநேரம், ஏப்ரல் 10 & 14 ஆகிய தேதிகளில் வரும் விடுமுறை மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஏன் தெரியுமா? ஏப்ரல் 10ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டால், பின்னர் சனி, ஞாயிறு, திங்கள் என 5 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. என்ன டூருக்கு பிளான் பண்ணியாச்சா?
Similar News
News March 30, 2025
கிட்னியை பாதுகாக்க எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை?

உடல் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பான கிட்னியை பாதுகாக்கும் ஒரே பொருள் தண்ணீர்தான். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கிட்னி செயலிழந்துவிடும். இந்நிலையில், கிட்னியை பாதுகாக்க தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் (8-10 கிளாஸ்) குடிக்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை குடிப்பது சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.
News March 30, 2025
கோல்டன் குளோப் விருதுகள் வென்ற சாம்பர்லின் மரணம்

கோல்டன் குளோப் விருதுகளை 2 முறை வென்ற ஹாலிவுட் நடிகரான ரிச்சார்ட் சாம்பர்லின் (90) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கொரியப் போரில் அமெரிக்கா சார்பில் போரிட்ட ரிச்சார்ட், பின்னாளில் தொலைகாட்சி படங்களில் நடித்தார். அதில் மிகவும் புகழ்பெற்றவை ‘The Count of Monte Cristo’, ‘Shōgun’ ஆகும். ‘The Bourne Identity’ தொலைக்காட்சி படத்தில் மேட் டாமன் கதாபாத்திரத்தில் சாம்பர்லினே நடித்திருந்தார்.
News March 30, 2025
CSK அணிக்கு 183 ரன்கள் இலக்கு

கவுஹாத்தியில் நடைபெற்று வரும் CSK vs RR, IPL போட்டியில் CSK அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார் சென்னை கேப்டன் ருதுராஜ். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் வீரர் நிதிஷ் ரானா, 36 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் RR 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.