News October 26, 2025

ஹாஸ்பிடல் அலட்சியத்தால் 5 குழந்தைகளுக்கு HIV தொற்று

image

ஜார்கண்டில் அரசு ஹாஸ்பிடலின் அலட்சியத்தால் 5 குழந்தைகளுக்கு HIV நோய் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றும்போது இந்த தவறு நடந்துள்ளதை, விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், ரத்த வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததது கண்டறியப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

தமிழகத்துக்கு விஜய் தேவையில்லாதவர்: KTR

image

அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்த விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். வேலை செய்யும் மனிதனுக்கு 6 விரல்கள் தேவையில்லை; 5 விரல்கள் போதுமானது என்றும், அந்த ஆறாவது விரல் போல தமிழகத்திற்கு விஜய் தேவையில்லாதவர் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் தான் நிற்கும்; இதர கட்சிகள் எல்லாம் கரைந்துவிடும் எனப் பேசினார்.

News January 26, 2026

ஆக.15, ஜன.26: கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம்!

image

*சுதந்திர தினத்தில் கீழிருந்து கொடி மேலே சென்று, முடிச்சு திறந்து பறக்கவிடப்படுவது ‘கொடியேற்றம்’ *குடியரசு தினத்தில் கம்பத்தின் உச்சியில் இருக்கும் கொடி அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படுவது ‘கொடியை பறக்கவிடுதல்’ *சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியை பறக்கவிடுவார்கள் *சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையிலும், குடியரசு தினத்தில் ராஜ்பாத்திலும் கொடி பறக்கவிடப்படும்.

News January 26, 2026

சற்றுமுன்: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $68(இந்திய மதிப்பில் ₹6,228) உயர்ந்து $5,047-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி $5 உயர்ந்து $106 ஆக உள்ளது. இதனால், இன்றைய இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 30 நாள்களில் மட்டும் $650 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!