News December 28, 2024
கேரட்டில் உள்ள 5 நன்மைகள்!

*வைட்டமின் A, பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்.
*கேரட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் K உள்ளதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
*உடல் எடையை குறைக்க விரும்புவோர், கேரட் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.
*நாள்தோறும் 5 கேரட் சாப்பிட்டால், மலச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
*கண் பார்வை பிரச்னை உள்ளவர்களுக்கு, கேரட் ஒரு சிறந்த தீர்வு.
Similar News
News April 25, 2025
பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார்!

ஹாலிவுட்டின் பிரபல நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார். 45 ஆண்டுகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வயது 63. அவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்த போதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. மிக பிரபலமான, ‘Friday the 13th’ மற்றும் ‘Knots Landing’ போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார் லார். இவர் அதிகமாக, நடித்திருப்பது பேய் படங்களிலும், தொடர்களிலும் தான். #RIP.
News April 25, 2025
இன்று உலக மலேரியா தினம்!

மலேரியா இல்லாத உலகத்தை நோக்கிச் செயல்பட, 2008-ம் ஆண்டு முதல் மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது. பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட, அனோபிலிஸ் என்ற பெண் கொசுக்கள் மனிதனை கடிப்பதனால் மலேரியா பரவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 200 கோடி மக்களை அச்சுறுத்தும் இந்த கொடிய நோயை விரட்ட அனைவரும் ஒன்றிணைவோம். இந்த ஆண்டின் கருப்பொருள்: ‘Malaria Ends With Us: Reinvest, Reimagine, Reignite’
News April 25, 2025
T20 கிரிக்கெட்டில் தொடரும் கோலியின் ஆதிக்கம்!

T20 வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் 408 மேட்ச்சில் விளையாடி, இதுவரை 111 முறை 50+ ரன்களை விளாசி இருக்கிறார். இந்த பட்டியலில், நேற்றைய அரைசதத்துடன் கோலி, கிறிஸ் கெயிலை (110) முந்தினார். முதல் இடத்தில் டேவிட் வார்னர் (117 முறை) இருக்கிறார். டேவிட் வார்னரின் ரெக்கார்டை விராட் கோலி முந்துவாரா?