News August 20, 2025

பள்ளி மாணவர்களுக்கு புதிதாக 5 AI படிப்புகள் அறிமுகம்

image

5 இலவச AI படிப்புகளை மத்திய அரசு ‘ஸ்வயம்’ தளத்தில் வழங்கியுள்ளது. <>Swayam<<>> ஆன்லைன் தளத்தில் AI/ML Using Python, AI கிரிக்கெட் பகுப்பாய்வு, இயற்பியல் AI, வேதியியல் AI, கணக்கியல் AI ஆகிய 5 படிப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக ஸ்வயம், திக்ஷா, என்பிடெல் உட்பட பல்வேறு டிஜிட்டல் தளங்கள் வழியாக இணையவழி படிப்புகளை கல்வி அமைச்சகம் இலவசமாக வழங்கி வருகிறது. SHARE IT.

Similar News

News August 21, 2025

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் இல்லை

image

குண்டும், குழியுமாக இருக்கும் ரோட்டில் பயணிப்பதை விட அதற்கு செலுத்துவது தான் கட்டுவதுதான் கொடுமையானது. இந்த நிலையில்தான், கேரளாவில் சேதமடைந்து இருக்கும் NH-544 சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தரமான சாலை வசதியை NHAI, மக்களுக்கு அமைத்து தர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது அனைத்து டோல்கேட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்?

News August 21, 2025

ராசி பலன்கள் (21.08.2025)

image

➤ மேஷம் – அனுகூலம் ➤ ரிஷபம் – வெற்றி ➤ மிதுனம் – பகை ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – மகிழ்ச்சி ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – மேன்மை ➤ விருச்சிகம் – ஆர்வம் ➤ தனுசு – இன்பம் ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – நன்மை ➤ மீனம் – முயற்சி

News August 21, 2025

விந்தணு மூலம் குழந்தைக்கும் பரவும்… ஆய்வில் அதிர்ச்சி!

image

ஒரு ஆண், சிறு வயதில் அனுபவிக்க நேரும் மன அதிர்ச்சியின் நினைவுகள், மரபணு மூலம் அவரது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மன அதிர்ச்சியின் நினைவுகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் மற்றும் அழற்சி விளைவுகள், அவரின் விந்து செல்களின் மரபணுக்களில் பதிவாகி, அதன்மூலம் அவரின் குழந்தைக்கும் செல்கிறது. இதனால் குழந்தையின் மனநலமும் பாதிக்கலாம் என்கின்றனர்.

error: Content is protected !!