News June 25, 2024
5.367 டி.எம்.சி., காவிரி நீரை திறக்க உத்தரவு

தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள 5.367 டி.எம்.சி., காவிரி நீரை திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் 31ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31.24 டி.எம்.சி., நீரையும் உரிய நேரத்தில் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
Similar News
News March 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
News March 5, 2026
ஆதிக்க வெறியின் ஆணவம் அழிப்பு: CM ஸ்டாலின்

திருச்சியில் தமிழில் <<19294297>>‘கர்தவ்ய த்வார்<<>>’ என எழுதப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அது நீக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் அகற்றப்பட்டது ஹிந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும் தான் என CM ஸ்டாலின் தனது X பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், போலி தமிழ்ப்பற்று காட்டுபவர்களையும், அவர்களுக்கு துணைநின்று TN-ற்கு துரோகம் இழைப்போரையும் மக்கள் அகற்றுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 5, 2026
SPORTS 360°: CSK அணியில் ஜேம்ஸ் ஃபோஸ்டர்

*மகளிர் ஆசிய கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் வியட்நாமிடம் தோல்வி *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன், ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் சிராக் ஷெட்டி, ராங்கிரெட்டி இணை தோல்வி *CSK அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபோஸ்டர் நியமிக்கப்படவுள்ளார் *பாகிஸ்தான் ODI அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம் *NZ ஓபன் ஸ்குவாஷில், இந்திய வீரர் சோட்ராணி உலகின் 6-ம் நிலை வீரரிடம் போராடி தோல்வி


