News November 26, 2025
5 விக்கெட்கள் காலி.. தடுமாறும் இந்தியா

549 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து விக்கெட்களை இந்தியா இழந்து வருகிறது. குல்தீப் 5, கேப்டன் பண்ட் 13, ஜுரேல் 2 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியுள்ளனர். இந்திய அணி தற்போது 60/5 எடுத்துள்ளது. களத்தில் சுதர்சன் 8, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
Similar News
News April 1, 2026
அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் இனி வங்கியை மாற்றலாம்!

போன் நம்பரை மாற்றாமலே, செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் வங்கி அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் புதிய வசதியை RBI பரிசீலித்துள்ளது. இதன்மூலம் சிறந்த சேவை வழங்கும் வங்கிக்கு, எளிதாக கணக்கை மாற்றலாம். இப்படி மாற்றும்போது முந்தைய வங்கியில் இருந்த EMI உள்பட அனைத்தும் புதிய வங்கிக்கு மாறிவிடும்.
News April 1, 2026
கேரளாவில் அடுத்து எந்த ஆட்சி? கருத்துக் கணிப்பில் ட்விஸ்ட்

கேரளாவில் 130 தொகுதிகளில் காங்.,+ 69-81 தொகுதிகளை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. மனோரமா நியூஸ் & C-Voter-ன் கருத்து கணிப்பில் ஆளும் CPM+ 57-69 தொகுதிகளிலும், NDA 1-5 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மக்களிடையே K-Rail திட்டத்துக்கு எதிர்ப்பு, விவசாயிகள் அதிருப்தி, சபரிமலை விவகாரம் உள்ளிட்டவை LDF பின்னடைவுக்கான காரணமாக கூறப்படுகிறது.
News April 1, 2026
ஆணை விட பெண் அதிகமாக தூங்கணும்.. ஏன் தெரியுமா?

ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் Multi-tasking-ல் ஈடுபடுவதால், தங்களுடைய மூளை ஆற்றலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆகையால், அதற்கேற்ப அவர்களுக்கு போதிய உறக்கம் தேவைப்படுகிறது. தூக்கமின்மை பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


