News December 5, 2024
5 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

மதுரை : பேரையூரைச் சேர்ந்த ராம்குமாரின் மனைவி ஆனந்த ஜோதி, மருதுபாண்டி என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவின் போது, அவரது 5 வயது மகன் ஜீவா பார்த்துள்ளான்.
இதனையடுத்து, ஜீவாவை அரைஞாண் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று, பூச்சிக்கடியால் இறந்து விட்டதாக நாடகமாடினார்.
ஆனந்த ஜோதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை 5வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
Similar News
News December 19, 2025
சிக்கந்தர் பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா நிபந்தனைகள்

தி.குன்றம் உஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, டிச.21ம் தேதி நடைபெறும் கொடியேற்றம் & சந்தனக்கூடு நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி நடத்த முடிவு. வழக்கமான ஊர்வல பாதைகளில் மட்டும் ஊர்வலம் நடைபெற வேண்டும். பட்டாசு பயன்படுத்தக் கூடாது. விதிமீறலால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தர்ஹா நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என நிபந்தனை.
News December 19, 2025
மதுரை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <
News December 19, 2025
மதுரை: திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரையை சேர்ந்த செல்வம் மகள் ஆர்த்தி(21)க்கும் மேலவளவு தென்னரசுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 3 பவுன் நகை போடப்பட்ட நிலையில் மேலும் 5 பவுன் நகை வாங்கி வர சொல்லி கணவர் இவரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் ஆர்த்தி நேற்று முன்தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தாயார் அனிதா புகாரில் மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


