News December 23, 2025
5 மணிநேரத்துக்கு கம்மியா தூங்குறீங்களா.. உஷார்!

ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் ★ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு, பக்கவாதம் வரலாம் ★நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏற்படலாம் ★டைப் 2 நீரிழிவு வரலாம் ★குறைவான தூக்கத்தால் பசியை கட்டுப்படுத்தும் லெப்டின் & கிரெடின் ஹார்மோன்கள் சமநிலையை இழக்கும். இதனால் அதிக பசி ஏற்பட்டு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, நல்லா தூங்குங்க!
Similar News
News December 28, 2025
தவெகவின் சின்னம்.. விரைவில் அறிவிக்கிறார் விஜய்

சேலத்தில் நடக்கவுள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெகவின் சின்னத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சின்னம் கோரி தவெக விண்ணப்பித்த நிலையில் விசில், மோதிரம், உலக உருண்டை உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை EC ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் அறிமுகப்படுத்தும் சின்னத்தை, 15 நிமிடங்களிலேயே உலகளவில் பிரபலப்படுத்த TVK நிர்வாகிகள் ஏற்பாடு செய்வதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 28, 2025
4-வது டி20: இன்று இந்தியா Vs இலங்கை

இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான 4-வது டி20 திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 8 விக்கெட், 2-வது டி20-ல் 7 விக்கெட், 3-வது டி20-ல் 8 விக்கெட் என 3 போட்டிகளில் வெற்றிபெற்று IND தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனையில் IND வீராங்கனைகள் உள்ளனர். அதேநேரம், ஆறுதல் வெற்றி பெறுவதற்காக SL அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
News December 28, 2025
வலுவான எதிரிகள் தேவை: விஜய்

‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் பேசியிருக்கிறார். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நண்பர்களை விட வலுவான எதிரிகள் தேவை என அவர் கூறியுள்ளார். சும்மா வருவோர், செல்வோரை எல்லாம் எதிர்க்க முடியாது என்றும், வலுவாக இருந்தால் தானே ஒருவரை எதிர்க்க முடியும் எனவும் அவர் பேசியுள்ளார். அப்போது தான் நாம் ஜெயிக்கும் அளவிற்கு வலிமையாக இருக்கிறோம் என்று அர்த்தம் என விஜய் தெரிவித்துள்ளார்.


