News December 13, 2024
5 நிவாரண முகாம்களில் 156 பேர் தங்க வைப்பு – ஆட்சியர்

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை தாலுகாவில் 19 பேரும், சேரன்மாதேவி தாலுகாவில் 132 பேரும், பாளை தாலுகாவில் 9 பேர் என மாவட்ட முழுவதும் 63 ஆண்கள் 74 பெண்கள் 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 156 பேர் நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
Similar News
News August 21, 2025
நெல்லையில் இன்று முதல் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

நெல்லை தச்சநல்லூரில் நாளை (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை நெல்லையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங் கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார் .
News August 21, 2025
நெல்லை: ரூ.96,000 சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் பணி

நெல்லை மக்களே; தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 (உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர்) பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.29ம் தேதி மாலை 05.45 மணி வரை. விருப்பமுள்ளவர்கள் <
News August 21, 2025
நெல்லை: காவல்துறையில் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுளவர்கள் இங்கே <