News December 7, 2024

5 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தார் உட்பட 5 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தாராக பணியாற்றி வந்த சத்யா, நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பிரிவுக்கு கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியரின் உதவியாளராக பணியாற்றிய மோகன்குமார் காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.

Similar News

News March 6, 2026

காஞ்சி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

காஞ்சிபுரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா தலைமையில் நேற்று தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குறித்த மாவட்ட நுண்ணறிவுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், தேர்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருட்கள் மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

News March 6, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து!

image

காஞ்சிபுரம்: வெள்ளகேட் பகுதியில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. லாரியை லிங்கநாதன் (38) ஓட்டி வந்தார். படப்பை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. லிங்கநாதன் உடனடியாக லாரியை நிறுத்தி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

error: Content is protected !!