News June 4, 2024
5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

நெல்லையில் ஒட்டுமொத்தமாக முதல் சுற்றில் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் 21,119 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் 16,390 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 3671 வாக்குகளும், நாம் தமிழர்- 4485 வாக்குகளும் பெற்றுள்ளன. நெல்லையில் மூன்றாம் இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது.
Similar News
News September 15, 2025
நெல்லை: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

நெல்லை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்க <
News September 15, 2025
நெல்லையில் இன்று அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம்

பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதார தேவைக்கு மாதம் 2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இன்று காலை பாளை நேருஜி கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுகுமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 15, 2025
நெல்லை: குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் (34), குழந்தை இல்லாத மனவேதனையால் விரக்தியில் நேற்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி இந்துமதி, உறவினர்களுடன் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்துமதியின் புகாரின் பேரில் விஜயநாராயணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.