News February 26, 2026
5 ஆபாச OTT தளங்களுக்கு தடை!

அதிகப்படியான ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாகவும், டிஜிட்டல் உள்ளடக்க விதிகளை மீறியதாக கூறி 5 OTT செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அவை என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். இத்தடை மற்ற செயலிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள தெளிவான எச்சரிக்கையாகும். இனி இந்த செயலிகளை இந்தியாவில் யூஸ் பண்ணவோ, டவுன்லோட் செய்யவோ முடியாது.
Similar News
News February 27, 2026
அதிமுகவை கிளை கழகமாக மாற்றிய பாஜக: CM ஸ்டாலின்

வளர்ச்சி என்றாலே பிடிக்காத கட்சியாக பாஜக இருந்து வருவதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பதால் அதிமுகவை தனது கிளைக் கழகமாக மாற்றி TN-ல் நுழைய பாஜக முயற்சிப்பதாகவும், அதிமுக அரசு ஊழல் நிறைந்தது என பேசியது இப்போது அமித்ஷாவுக்கு நினைவில் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்காக கூட TN-க்கு எந்த சிறப்பு திட்டங்களையும் பாஜக அறிவிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.
News February 27, 2026
குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி?

➤குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் ➤அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள் ➤அவர்களுடைய சின்ன சின்ன முயற்சிகளையும் பாராட்டுங்கள் ➤குழந்தை முன் வீட்டில் சண்டையிடுவதை தவிருங்கள் ➤அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள் ➤குழந்தைகளின் Decision making திறனை வளர்க்கும் விதமாக சின்ன சின்ன முடிவுகளை அவர்களே எடுக்க அனுமதியுங்கள். அனைத்து பெற்றோருக்கும் SHARE THIS.
News February 27, 2026
ரோபோ சங்கர் மரணம்.. நடிகர் விமல் வேதனை

தமிழ் சினிமாவில் ரோபோ சங்கருக்கு எப்போதும் தனி இடமுண்டு. அவரது மறைவு பற்றி விமல் உருக்கமாக பேசியுள்ளார். வடம்’ படத்திற்காக பெரும் பொருள்செலவில் எடுக்கப்பட்ட காட்சியில் நடித்து கொண்டிருந்ததால், அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். குற்றாலத்தில் ரோபோ சங்கருக்கு பேனர் வைத்து, 500 பேருக்கு புடவை, 2,000 மரக்கன்றுகளை தயாரிப்பாளர் வழங்கியதாகவும் விமல் குறிப்பிட்டுள்ளார்.


