News December 5, 2024
5 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

மதுரை : பேரையூரைச் சேர்ந்த ராம்குமாரின் மனைவி ஆனந்த ஜோதி, மருதுபாண்டி என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவின் போது, அவரது 5 வயது மகன் ஜீவா பார்த்துள்ளான்.
இதனையடுத்து, ஜீவாவை அரைஞாண் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று, பூச்சிக்கடியால் இறந்து விட்டதாக நாடகமாடினார்.
ஆனந்த ஜோதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை 5வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
Similar News
News December 15, 2025
திருமங்கலம் கால்வாயில் தவறி விழுந்தவர் பலி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கொக்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சௌந்தரபாண்டி (54). இவர், செக்கானூரணி பகுதியில் உள்ள திருமங்கலம் கால்வாயில் சனிக்கிழமை தவறி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 15, 2025
இன்று நள்ளிரவு முதல் மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்ட பணிக்காக வைகை தென்கரை சாலையில் பில்லர் மற்றும் இணைப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று டிச.15 நள்ளிரவு முதல் கட்டுமான பணி முடிவடையும் வரை, வைகை தென்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம், இதன்படி வைகை வடகரை சாலைக்கு சென்று இடது புறம் திரும்பி தேனி ஆனந்தம் சந்திப்பு வழியாகவோ செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.