News August 3, 2024

5 நாட்களுக்கு பயணிகள் ரயில் ரத்து

image

மதுரை, திருவனந்தபுரம் கோட்டங்களில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆக.5, 6, 8, 9, 11 ஆகிய 5 நாட்களுக்கு மதுரை – ராமநாதபுரம் இடையேயான பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மேலும் குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் 4 நாட்களுக்கு மதுரை, திண்டுக்கல் செல்லாமல் மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

மதுரை: +2 முடித்த பெண்கள் கவனத்திற்கு!

image

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் உள்ள காலி இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி இளநிலை பிஏ ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி கணிதம், புவியியல் & இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கும் முதுநிலை தாவரவியல் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News September 17, 2025

மதுரையில் பரவும் காய்ச்சல்; என்ன செய்ய வேண்டும்?

image

மதுரையில் மாறி வரும் மழை – வெயில் காரணமாக டெங்கு, ப்ளூ உள்ளிட்ட வைரல் காய்ச்சல்கள் அதிகரித்துள்ளன. தற்போது 58 பேர் சிகிச்சையில் உள்ளனர். காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் ரத்தப் பரிசோதனை அவசியம். அதன் தொடர்ச்சியாக கொசுப்புழு ஒழிப்பு, குடிநீர் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் மருத்துவ ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. *விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர்

News September 17, 2025

மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளுபடி

image

வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மேயர் உமாவின் கணவர் பொன் வசந்த் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
ஆக.12ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
ஜாமீன் கோரி அவர் உடல்நிலை மோசம் மற்றும் வழக்கில் தனது பெயர் காரணமின்றி சேர்க்கப்பட்டதாக வாதிட்டார். வெளிவந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்பதால் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

error: Content is protected !!