News March 19, 2025
5 தலைமுறை கண்ட மூதாட்டி மரணம்

பல்லடம் அருகே பூமலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமாத்தாள் (110) வயது மூப்பால் நேற்று உயிரிழந்தார். கணவர் முத்துசாமி 22 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 44 பேரன், பேத்திகள் உள்ளனர். 2013இல் சதாபிஷேகம் கொண்டாடப்பட்டது. இறுதிச்சடங்கில் ஐந்து தலைமுறையினர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 21, 2025
திருப்பூருக்கு ரூ.890 கோடி!

திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.890 கோடி மதிப்பீட்டில் ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும். முத்தூர்-காங்கேயம் குடிநீர்த் திட்டத்தில் குழாய்கள், மோட்டார்கள் உள்ளிட்டவை மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும், ரூ.2423 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் 3 ஆண்டில் நிறைவேற்றப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
News March 21, 2025
திருப்பூரில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பூர் செரங்காடு பகுதி சேர்ந்தவர் பிரகாசம், பனியன் நிறுவன தொழிலாளி. இவர் 13 வயது சிறுமிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பிரகாசத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
News March 20, 2025
குடிமங்கலத்தில் சூதாடிய மூன்று பேர் கைது

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் திருப்பூர் மாவட்ட காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குடிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.