News September 13, 2024
5 கோடி மதிப்பிலான காய்கறி விற்பனை

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளில் 70 சதவீதம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை காய்கறி மார்க்கெட் களைகட்டியது. 1000க்கும் மேற்பட்ட லாரிகளில், சுமார் 5 கோடி மதிப்பிலான காய்கறிகளை கேரள வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
Similar News
News August 9, 2025
திண்டுக்கல்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 08) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் காவல் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 9, 2025
திண்டுக்கல்லில் 12வது புத்தக கண்காட்சி அழைப்பு

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 7 ந்தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தவறாமல் அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆக.8) இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல்,ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை,பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.