News August 4, 2024
5 ஆண்டுகளில் 17,017 செல்ஃபோன்கள் திருட்டு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 17,017 செல்ஃபோன்கள் திருடு போனதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் RTI மூலம் கேட்ட கேள்விக்கு குற்ற ஆவண காப்பகம், 2018 முதல் 2022 வரை, சென்னையில் மட்டும் 5,365 செல்ஃபோன்கள் திருடு போயுள்ளன. 17,017இல் 7,984 செல்ஃபோன்களை மீட்க முடியவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக பதிலளித்துள்ளது.
Similar News
News October 14, 2025
Bussiness Roundup: தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு

*வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ₹88.67 ஆனது. *நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 14 லட்சம் கிலோ குறைந்துள்ளது. *அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த, இந்திய அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளது. *தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
News October 14, 2025
இந்தியாவின் பசுமையான ரயில் நிலையங்கள்

சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தாமல், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் ரயில் நிலையங்கள் பசுமையான ரயில் நிலையங்களாக அறியப்படுகின்றன. சோலார் பேனல்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, சூழலுக்கு உகந்த கட்டுமான பொருள்களைக் கொண்டு இவை அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பசுமையான ரயில் நிலையங்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News October 14, 2025
‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு 2 கெட்டப்?

‘அரசன்’ படத்தில் சிறு வயது சிம்பு, 45+ வயது சிம்பு என 2 வேடங்களில் நடிக்கிறாராம். அதேபோல், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட நடிகர் உபேந்திராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கிச்சா சுதீப் இறுதி செய்யப்பட்டுவிட்டாராம். மேலும், புரொமோவும் வடசென்னையில் 2 கட்டங்களாக ஷூட் செய்யப்பட்டுவிட்டதாம். நாளை மறுநாள் புரொமோ வெளியாக உள்ளது.