News March 29, 2025

5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

image

செங்கம், செ.நாச்சிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரவிநாயகம். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன், சுந்தரவிநாயகத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ட்விஸ்ட் 

image

செய்யாறு கண்ணியம் நகரைச் சேர்ந்த ஜெமினி(22) மார்ச் 28 அன்று கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில், சுனிலை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஜெமினியுடன் முன்விரோதம் காரணமாக திலீப்குமார் உள்ளிட்டோர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் வெளியான போதை ஊசி தகராறு செய்தி தவறானது என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். 

News April 4, 2025

திருவண்ணாமலை கோவிலில் எஸ்.வி.சேகர் தரிசனம்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று சாமி தரிசனம் செய்து, விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி, 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார். 

error: Content is protected !!