News October 23, 2024
4வது திருமணம் செய்த நடிகர் பாலா

நடிகர் பாலா இன்று முறைப்பெண் கோகிலாவை திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு நடக்கும் 4வது திருமணமாகும். 2010ல் பாடகி அம்ருதாவை மணந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின் 2021ல் டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து, அவரையும் பிரிந்தார். இதனிடையே, 2008ல் சந்தனா என்பவரை திருமணம் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், இன்று உறவினர்கள் முன்னிலையில் கோகிலாவை மணந்துள்ளார்.
Similar News
News November 27, 2025
வெல்வோம் 200, படைப்போம் வரலாறு: உதயநிதி

பிறந்தநாளை ஒட்டி அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களில் DCM உதயநிதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது பிறந்தநாள் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய உதயநிதி, SIR திட்டத்தில் வாக்குகளை உறுதி செய்யும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும், வெல்வோம் 200 படைப்போம் வரலாறு எனவும், இதுவே தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என்றும் கூறினார்.
News November 27, 2025
செங்கோட்டையன் முடிவு தற்கொலைக்கு சமம்: செம்மலை

பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை. அதுபோல செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று செம்மலை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தற்கொலைக்கு சமமான முடிவு என்று விமர்சித்த அவர், தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
News November 27, 2025
விவசாயிகளின் முதுகில் குத்தியவர் EPS: ரகுபதி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகள் முதுகில் குத்தியவர் EPS என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நெல் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டிக்காமல், திமுகவை குறை கூறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அரசு என்றால் அமைதியாக இருக்கும் EPS, திமுக என்றால் ஆவேசமாகி விடுவதாகவும் விமர்சித்துள்ளார். EPS-க்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


