News January 9, 2025
4,92,891 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு- ஆட்சியர் தகவல்

புதுகை மாவட்டத்தில் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். புதுகை மாவட்டத்தில் 4,91,944 அரிசி அட்டை தாரர்களுக்கும், 947 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 22, 2026
புதுகை: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

புதுகை மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 22, 2026
புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் பலி

பொன்னமராவதியில் இருந்து குழிபிறைக்கு நேற்று அழகன் (46) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது குழிபிறை சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த சின்னையா (43) என்பவர் மோதியதில் அழகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் பனையப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 22, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.21) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


