News February 8, 2025
49% கூடுதல் சொத்துக்களை வாங்கி குவித்தவர் கைது

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பிட்டர் கண்ணன், கடந்த 15 ஆண்டுகளில் வருமானத்திற்கும் அதிகமாக 49% கூடுதல் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது. சந்தை மதிப்பில், 4 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்துக்களை வாங்கியுள்ளதாக அவர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிவு செய்து, கணக்கில் வராத 2.16 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 24, 2025
கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News August 24, 2025
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அடையாள அட்டை!

ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் ந.மிருநாலினி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.ஹிலாரினா, ஜோஷிடா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News August 23, 2025
காஞ்சிபுரத்தில் இந்த இடங்களை எல்லாம் நோட் பண்ணிக்கோங்க!

கோயில் நகரமான காஞ்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களை இங்கு காணலாம். ▶உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோயில் ▶ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில் ▶ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோயில் ▶காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ▶கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் ▶கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில் ▶குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில் ▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில் ▶திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில். ஷேர் பண்ணுங்க!