News September 7, 2024

48,969 பேர்: சேலம் கலெக்டர் தகவல்

image

சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் செப் 10 முதல் செப்.24 வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 26,478 பள்ளி மாணவ, மாணவிகளும், 13,273 கல்லூரி மாணவ, மாணவிகளும், 1,737 மாற்றுத்திறனாளிகளும், 1,246 அரசு அலுவலர்களும், 6,235 பொதுமக்களும் என மொத்தம் 48,969 நபர்கள் பதிவுச் செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Similar News

News July 7, 2025

கல்யாண பாக்கியம் தரும் பேளூர் கோயில்!

image

சேலம் மாவட்டம் பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.12ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் தான்தோன்றீஸ்வரர் (சிவன்), இறைவி தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் கல்யாண விநாயகருக்கு மாலை, தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE பண்ணுங்க!

News July 7, 2025

பதக்கங்களை வென்று சேலம் வீரர்கள் அசத்தல்!

image

ஹைதராபாத்தில் கடந்த ஜூன் 26- ஆம் தேதி முதல் ஜூலை 1- ஆம் தேதி வரை நடைபெற்ற 24- வது ஜூனியர் தேசிய வூசூ சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ▶️நிகில் 1 தங்கம், 3 வெண்கலம், ▶️தர்ஷன் 1 தங்கம், 1 வெண்கலம், ▶️ஹாஸ்னி 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம், ▶️நிக்ஷிதா 1 தங்கம், 1 வெண்கலம், ▶️பிரகல்யா 1 தங்கம், 1 வெண்கலம், ▶️கார்முகிலன், மௌலிதரன் தலா 1 வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தினர்.

News July 7, 2025

சேலத்தில் 8.94 லட்சம் பேருக்கு சத்துமாவு விநியோகம்

image

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், 8.94 லட்சம் குழந்தைகளுக்கு 2205 டன் சத்துமாவு விநியோகிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

error: Content is protected !!