News October 26, 2024
4,857 மெட்ரிக் யூரியா கையிருப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் 4,857 மெட்ரிக் யூரியா கையிருப்பு உள்ளது. மேலும் 2569 டன் காம்ப்ளக்ஸ் 3065 மெட்ரிக் டன் டிஏபி 471 மெட்ரிக் டன் டிஏபி, 471 மெட்ரிக் டன் பொட்டாஸ் கையிருப்பு உள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
திருச்செந்தூர் கோவிலை உறுதிமொழி குழுவினர்ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் இன்று 12.9.25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பாடசாலையை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர்.
News September 12, 2025
தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News September 12, 2025
தூத்துக்குடியில் குற்றாவளி ஆஜராக நீதிமன்றம் கெடு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் மீது ஒரு வழக்கு விசாரணை உள்ளது. இந்த விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் தூத்துக்குடி நீதிமன்றம் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்றால் அவர் தலைமறைவு குற்றவாளி என தீர்ப்பு விதிக்கப்படும் என நீதிபதி தாண்டவன் எச்சரிக்கை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.