News March 21, 2025
ஆன்லைன் விளையாட்டால் 47 பேர் தற்கொலை: அரசு

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, இளைஞர்களின் நலன்களை கருத்தில் கொண்டே ஆதார் இணைப்பு மற்றும் நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 22, 2025
DELIMITATION: சென்னையில் பல மாநில CMகள் முகாம்

மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. CM ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனையில் பங்கேற்க கேரளா, தெலங்கானா, பஞ்சாப் CMகள் கர்நாடகா, ஒடிசா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் TN வந்துள்ளனர். இன்றைய ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 22, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 22, 2025
எந்த நிதியில் மடிக்கணினி? அண்ணாமலை

எந்த நிதியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்பதை TN அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடப்பாண்டு மடிக்கணினி வழங்க ₹2,000 கோடி ஒதுக்கப்படும் என TN பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். இதனை சுட்டிக்காட்டிய அவர், நடப்பாண்டு மடிக்கணினி வழங்க முடியாது எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும், எதற்காக இந்த வெற்று அறிவிப்பு எனவும் வினவியுள்ளார்.