News June 15, 2024
UPI மூலம் 47% இந்தியர்களிடம் நூதன மோசடி

மக்கள் UPI மூலம் பணம் செலுத்தும் வழக்கத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல், நூதன முறையில் 47% இந்தியர்களிடம் கைவரிசை காட்டியுள்ளது. UPI லிங்கை அனுப்பி அதை திறக்கும்படியோ, ஸ்கேன் செய்யும்படியோ அறிவுறுத்தும் இக்கும்பல், அதை நம்பி மக்கள் OTP அல்லது PIN விவரங்களைக் கொடுத்ததும், UPI மூலம் அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை திருடியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
மயிலாடுதுறை: +2 தேர்வில் 177 பேர் ஆப்சென்ட்

மயிலாடுதுறை மாவட்டத்தில் +2 அரசு பொது தேர்வு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 4847 மாணவர்கள் 5662 மாணவிகள் என மொத்தம் 10,509 மாணவ, மாணவிகள் நேற்று பொதுத்தேர்வு எழுதினர் விண்ணப்பித்தவர்களில் 177 பேர் தேர்வு எழுத வரவில்லை. 10 பறக்கும் படைகள் 38 நிலையான படைகள் 13 வழிதட அலுவலர்கள் 41 முதன்மை கண்காணிப்பாளர்கள் 41 துறை அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News March 3, 2026
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு பல்வேறு வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மனித உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ணி, உற்சாகமாக உழைக்க, 6 வகையான ரெஸ்ட்களை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை என்னென்ன என அறிய, போட்டோவை Swipe பண்ணுங்க. உங்களுக்கு எந்த விதமான ரெஸ்ட் தேவைப்படுது?
News March 3, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

தமிழக தேர்தல் தேதியை ஒட்டுமொத்த வாக்காளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேதி அறிவிக்கப்படலாம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 5) கேரளா செல்லும் CEC அடங்கிய குழு, 9, 10-ம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். எனவே, அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளனராம்.


