News August 6, 2024
47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றிய காவல் அதிகாரிகள், கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் படிப்படியாக அவர்கள் மீண்டும் அவரவர் பகுதிகளுக்கு பணி அமர்த்தப்பட்டனர். அந்தவகையில் திருச்சி புறநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி சரகத்தில் 47 காவல் அதிகாரிகளை திருச்சி மண்டலத்தில் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
Similar News
News August 15, 2025
திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.31-ம் தேதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் திருச்சி மாவட்ட வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW !!
News August 15, 2025
திருச்சி: தேவாலயங்களை புனரமைக்க மானியம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பீடம் கட்டுதல், குடிநீர், கழிவறை வசதிகள், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு மானியம் வழங்க உள்ளது. இதற்கு தகுதியான தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
சென்னை – திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளிக்கு இன்று (ஆக.14) இரவு இயக்கப்பட உள்ளது. இன்று இரவு 11:10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் நாளை (ஆக.15) காலை 7:30 மணிக்கு திருச்சி வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.