News August 3, 2024
47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி, காய்கறி, மார்க்கெட், பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் எடைகற்கள் வைத்திருக்காத 17 கடைகள் என 37 வணிக நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்து நிலையங்களில் 9 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு மொத்தம் 47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
தென்காசி: குளத்தில் இருந்து எடுக்கபடும் தண்ணீர்

தென்காசி, குத்துக்கல்வலசை ஊராட்சி அடவிநயினார் அணை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பொதுபணித்துறைக்கு சொந்தமான நெடுங்குளத்தில் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் மூலம் வணிக பயன்பாட்டுக்குக்காக எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக சொல்லபடுகிறது. நிலத்தடி நீர் சீக்கிரம் வரண்டு விவசாய பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் என விவசாயிகளின் வேதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 13, 2025
தென்காசி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <
News September 13, 2025
தென்காசி: “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் நேற்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு மேற்க்கொண்டார்.