News May 17, 2024
460 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளதால், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கூடுதலாக 460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று (மே 17) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
சாலையோரம் கிடந்த குழந்தை

விழுப்புரம் மாவட்டம். வளவனுார் அடுத்த வி.பூதூர் ஊராட்சியில், கிராம மக்கள் நேற்று 100 நாள் வேலை செய்து கொண்டு இருந்த போது, சாலையோரம் குழந்தையின் அழுகுரல் கேட்டு, துணியால் சுற்றப்பட்டு இருந்த குழந்தையை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குழந்தையை மீட்டு யார் அந்த குழந்தையை வீசி சென்றது என விசாரித்து வருகின்றனர்.
News July 11, 2025
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 12 ஆம் தேதியன்று குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், எண் மாற்றம் போன்ற பணிகளை ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் இது நடத்தப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.