News October 25, 2024
ED நடத்திய சோதனையில் ரூ.46 லட்சம் பறிமுதல்

9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.46 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மானேசர், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் சொகுசு கார்கள், வங்கி லாக்கர்கள், டீமேட் கணக்குகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நிதி மோசடி தொடர்பான ஆதாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களையும் சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
Similar News
News September 9, 2025
செங்கோட்டையன் முடித்த உடன் தம்பிதுரை தொடங்கினார்!

தமிழகம் திரும்பியதும் <<17658301>>செங்கோட்டையன்<<>> பேட்டியளித்த சிறிதுநேரத்தில், டெல்லியில் இருந்த தம்பிதுரை பேட்டியளித்தார். அப்போது, தானும் அமித்ஷாவை சந்தித்து பேசினேன் எனவும், செங்கோட்டையன் உடனான சந்திப்பு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை என்றும் தம்பிதுரை விளக்கம் அளித்தார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி கருத்துக் கூற முடியாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News September 9, 2025
SCIENCE: டாக்டர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் பெரிய காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை(சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர். SHARE.
News September 9, 2025
BREAKING: நேபாள ஜனாதிபதி ராஜினாமா

நேபாளத்தில் இளைஞர்களின் புரட்சியால் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு ஆட்சியை ராணுவம் கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.