News August 8, 2024
45 வயது பெண்களை குறி வைக்கும் கொடூர சைக்கோ

உத்தரப் பிரதேசம் பரேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 45 – 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 14 மாதங்களில் மட்டும் 9 பெண்கள் இதுபோல் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் வயல்வெளிகளில் வீசப்பட்டுள்ளன. கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால் குற்றவாளி சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என முடிவு செய்து, அவனை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
Similar News
News January 22, 2026
தங்கம் விலை மிகப்பெரிய மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று பெருமளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $24.68 உயர்ந்து $4,786.14-க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலை 1 அவுன்ஸ்-க்கு $3.57 குறைந்து $91.17 ஆக உள்ளது. இதனால், இன்றும் (ஜன.22) இந்திய சந்தையில் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 22, 2026
சிவன் கோயிலில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!

புராணத்தின் படி, ஆலகால விஷத்திலிருந்து தப்பிக்க தேவர்கள் சோமசூட்ச பிரதட்சண(பிறை சந்திர வடிவம்) முறையிலேயே சிவனை வழிபட்டனர். சிவன் கோயிலில் முதலில் சிவனை தரிசித்து விட்டு, இடமிருந்து வலமாக தட்சிணாமூர்த்தி வரை ஒரு முறை சுற்றவும். பிறகு, ஆரம்பித்த இடத்தில் இருந்து கோமுகி வரை மட்டும் சன்னதியை சுற்றவும். முழுவதுமாக சுற்றினால் உடலிலும், மனதிலும் எதிர்மறை எண்ணங்கள் எழுமாம். நாமும் அப்படியே வழிபடவோம்.
News January 22, 2026
CM ஸ்டாலின் மீதான வழக்கின் இறுதி விசாரணை

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் CM ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு SC-ல் இறுதி விசாரணை தொங்கி உள்ளது. சைதை துரைசாமி தரப்பில், தேர்தல் செலவு வரம்பை மீறியதாகவும், பணப்பட்டுவாடா நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஸ்டாலின் தரப்பில், தேர்தல் செலவுக்கு கட்டுப்பாடு இல்லாததே பெரிய பிரச்னை என வாதிடப்பட்டது.


