News November 16, 2025

45 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை

image

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்,இன்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 67 புகார்கள் பெறப்பட்டு, 45 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

புதுவை: 55 கி.மீ. வேகத்தில் காற்று எச்சரிக்கை

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தியில், தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று காற்று மணிக்கு சுமார் 55 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே புதுவையில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

News November 16, 2025

புதுவை: அரசு பணி விண்ணப்பங்கள் வரவேற்பு!

image

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பட்டப்படிப்பு, பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் அதற்கு இணையான கல்வி தகுதி அடிப்படையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியின் காலியிடங்கள் தொடர்பான விவரங்களை (நவ.18) முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

News November 16, 2025

காரைக்காலில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

image

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது ஒரு காரில் வந்த நபர் கார நிறுத்தாமல் சென்றதால் அந்த காரை போலீசார் துரத்தி சென்றனர். அப்பொழுது அந்த கார நிறுத்திவிட்டு காரை ஓட்டிய ஓட்டுனர் தப்பி ஓடினார். உடனடியாக அந்த காரை சோதனை செய்த போது ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!