News November 14, 2024

45 நாள் ஆண் குழந்தை கடத்தல்: காவல்துறை விசாரணை

image

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு திட்டங்களை பெற்றுத் தருவதாகக் கூறி, குழந்தையின் தாயை தி.நகருக்கு அழைத்து சென்ற பெண், தாயை பிஸ்கட் வாங்க அனுப்பிவிட்டு குழந்தையை கடத்திச் சென்றுள்ளர். இதுகுறித்த புகாரின் பேரில், அந்தப் பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 10, 2025

வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்டை நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News September 10, 2025

சென்னையில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

image

சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில்,அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கியாது. சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. உங்க ஏரியால மழையா?.

News September 10, 2025

சென்னை மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

சென்னை மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!