News January 25, 2026

44 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கங்கள்

image

குடியரசு தினத்தை முன்னிட்டு 44 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின பதக்கங்கள் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் சிறப்பு செயலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. விருதை பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம், ₹25,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 4, 2026

திமுக எங்களை மிரட்டுகிறது: அருண்ராஜ்

image

திமுகதான் போலீஸ் அதிகாரிகளை வைத்து தங்களை மிரட்டுகிறது என அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். தவெகவின் பேனரை அகற்றும் போலீசாரை மிரட்டுகிறீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஏன் பேனரை அகற்றுகிறீர்கள் என கேள்வி கேட்டால் மிரட்டுவதாக அர்த்தமா என்றார். மேலும், தவெகவை பொறுத்தவரை அதிகாரம் என்பது ஒரு பொறுப்புதான் எனவும், அது பதவி கிடையாது என்றும் கூறியுள்ளார்.

News February 4, 2026

BREAKING: தங்கம், வெள்ளி.. விலை விண்ணை முட்டியது

image

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் 1 கிராம் ₹20 உயர்ந்து ₹320-க்கும், 1 கிலோ ₹20,000 அதிகரித்து ₹3.20 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ₹1.45 லட்சம் வரை குறைந்த நிலையில், 2 நாள்களில் மட்டும் ₹40,000 உயர்ந்துள்ளது. நகைப் பிரியர்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 4, 2026

விஜய்க்கு கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இல்லை: ஜெயக்குமார்

image

கரூர் சம்பவத்தில் விஜய் மீதும் தப்பு இருக்​கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சி விழாவில் விஜய் டான்ஸ் ஆடுகிறார் என்ற அவர், அந்த 41 குடும்​பங்கள் எந்த அளவுக்கு மனதளவில் கஷ்டப்​படு​வார்கள் என்பதை விஜய் நினைத்துப் பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 41 பேர் உயிரிழந்ததை பற்றி அவர் ஏதாவது பேசியிருக்​கி​றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!