News April 15, 2024

4314 பேர் தபால் வாக்கு பதிவு

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2843 பேர் மற்றும் ராணுவத்தில் உள்ள 3 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு நடந்த 2 ஆம் கட்ட பயிற்சியின் போது 1468 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மக்களவை தொகுதியில் மட்டும் இதுவரை 4314 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 8, 2025

பெருந்துறை அருகே பெண் கொடூரக் கொலை!

image

பெருந்துறை அருகே தீர்த்தாம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (60) இவர் மனைவி விஜயா(52) இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சொத்து விற்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காஞ்சி கோவில் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயாவை செங்கோட்டையன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார். காயமடைந்த விஜயா துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.

News December 8, 2025

சித்தோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தகவல் அறிந்து சென்ற சித்தோடு போலீசார் 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், கருங்கல்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் (33) மற்றும் ஹரிபிரசாத் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News December 8, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.

error: Content is protected !!