News August 10, 2024
மருத்துவப் படிப்புக்கு 43,000 பேர் விண்ணப்பம்

2023-24ஆம் கல்வியாண்டில் MBBS, BDS படிப்புகளுக்கு மாநிலத்தில் 43,000 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு இடங்களுக்கு ஜூலை 31இல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. தரவரிசைப் பட்டியல் ஆக. 19ல் வெளியாகிறது. தொடர்ந்து, மாநில அரசு ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு ஆக. 21, விளையாட்டுப் பிரிவு சிறப்பு ஒதுக்கீடுக்கு ஆக. 12இல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
Similar News
News November 23, 2025
இந்திய ODI அணிக்கு கேப்டனாகிறாரா கே.எல்.ராகுல்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கழுத்து வலியில் இருந்து மீள சுப்மன் கில்லுக்கு மேலும் அவகாசம் தேவைப்படுவதால் அணியை ராகுல் வழிநடத்துவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பண்ட் துணை கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. 3 போட்டிகள் கொண்ட ODI தொடர் வரும் நவ.30-ம் தேதி தொடங்குகிறது.
News November 22, 2025
மெட்ராஸ் HC வாயில்கள் மூடல்.. ஏன் தெரியுமா?

மெட்ராஸ் HC-ன் அனைத்து வாயில்களும் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் HC கட்டப்பட்டதால் அதன் வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் வளாகத்தை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக HC-ன் வாயில்கள் வருடத்தின் ஒரு நாள் மூடப்படுகின்றன. இது நவ. இறுதி வாரத்தில் பின்பற்றப்படுகிறது.
News November 22, 2025
847 பந்துகளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 847 பந்துகளில் முடிவுக்கு வந்தது. 1895-ல் நடந்த டெஸ்ட் 911 பந்துகளில் முடிந்தது. அதன்பிறகு, கடந்த 130 ஆண்டுகளில் விரைவாக முடிந்த டெஸ்ட் இதுதான். அதேபோல, குறைந்த நேரத்தில் இங்கி., அணி 2 இன்னிங்ஸ்களையும் முடித்த போட்டியும் இதுதானாம். இங்கி., பேட்ஸ்மென்கள் இந்த டெஸ்டில் 405 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டனர்.


