News January 24, 2025
அரசுப்பள்ளியில் 43 மாணவிகள் வன்கொடுமை

தஞ்சை அரசுப் பள்ளியில் 43 மாணவிகளை கணித ஆசிரியரே வன்கொடுமை செய்துள்ளதாக பாஜக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் சரியான நடவடிக்கை எடுக்காமல், இடைநீக்கம் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, “பள்ளிக்கல்வித்துறை என் ஏரியா” என வீராப்பு பேசும் அமைச்சரே, இந்த அளவிற்கு தான் தங்களது தலைமையில் அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றவா? என கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News November 26, 2025
புதுகை: உடலை வயல் வழியே தூக்கி செல்லும் அவலம்

பழைய ஆதனக்கோட்டை கிரமாத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரில் இறந்தவர்களின் உடலை 1கி.மி தூரத்தில் உள்ள மாயனத்தில் அடக்கம் செய்கின்றனர். இந்நிலையில், மயத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறுதி சடங்கின் போது வயல் வழியே உடலை சேற்றில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
News November 26, 2025
விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.
News November 26, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. அதன்படி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்


