News February 25, 2025
தமிழக அரசில் 425 இடங்கள்.. ₹1,30,400 வரை சம்பளம்!

தமிழக அரசின் ஹாஸ்பிடல்களில் Pharmacist பணிக்கு 425 காலிப்பணியிடங்கள் உள்ளன. பார்மசி படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு, கணினி வழித் தேர்வு ஆகியவை நடைபெறும். சம்பளம் தகுதிக்கேற்ப ₹35,400 – ₹1,30,400 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் மார்ச் 10க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
Similar News
News February 25, 2025
5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4இல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவராத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2025
தோனியே கேப்டனாக இருந்தாலும்.. சானா சாடல்

INDக்கு எதிரான போட்டிக்கான PAK அணியை அறிவித்த போதே, அந்த அணி தோல்வி அடைந்துவிட்டதாக PAK மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சானா மிர் விமர்சித்துள்ளார். தோனி போன்ற தலைசிறந்த கேப்டனால் கூட இப்படி ஒரு அணியை வைத்து வெல்ல முடியாது எனவும், 2 பார்ட் டைம் பவுலர்களை வைத்து போட்டியை எதிர்கொண்டதே தவறு எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், PCB நிர்வாகத்தில் முழுமையான மாற்றம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 25, 2025
Delimitation: திமுக எதிர்ப்பு ஏன்?

மத்திய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையறைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால், மறுவரையறைக்குப் பின் தமிழகத்தின் லோக் சபா தொகுதிகள் 39இல் இருந்து 31ஆக குறையும். அதேநேரம், உத்தர பிரதேசத்தின் தொகுதிகள் 80இல் இருந்து 143ஆக உயரும். இது தென் மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதாக திமுக குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்த உங்களது கருத்து என்ன?