News February 25, 2025

தமிழக அரசில் 425 இடங்கள்.. ₹1,30,400 வரை சம்பளம்!

image

தமிழக அரசின் ஹாஸ்பிடல்களில் Pharmacist பணிக்கு 425 காலிப்பணியிடங்கள் உள்ளன. பார்மசி படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு, கணினி வழித் தேர்வு ஆகியவை நடைபெறும். சம்பளம் தகுதிக்கேற்ப ₹35,400 – ₹1,30,400 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் மார்ச் 10க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News February 26, 2025

சிவராத்திரி: பஞ்ச பூத ஸ்தலங்கள்

image

மகா சிவராத்திரியையொட்டி பஞ்ச பூத சிவ ஸ்தலங்களை சிலர் வழிபடுவதுண்டு. அவை [1] காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் (நிலம்) [2] திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் (நெருப்பு) [3] திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் (நீர்) [4] தில்லை நடராஜர் கோயில் (ஆகாயம்) [5] காளஹஸ்தி திருக்காளத்தி கோயில் (காற்று). இந்த கோயில்களில் தரிசனம் செய்தால், சிவன் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

News February 26, 2025

மாநில உரிமையில் ஒன்று சேர வேண்டும்: சீமான்

image

அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான கேள்விக்கு, ‘மாநில உரிமை என்று வரும்போது எல்லோரும் சேர்ந்து நின்றுதான் ஆக வேண்டும்’ என சீமான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் ஒருமித்த குரலாக எதிர்க்க வேண்டும் எனக்கூறிய அவர், சீர்த்திருத்தம் என்ற பெயரில் சீரழிப்பதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

News February 26, 2025

ஏசி காற்றால் ஏற்படும் தீமைகள்

image

* ஏசி ரூமில் இருப்போரது உடலில் நீர் குறையும்
* ஏசி காற்று நேரடியாக உங்கள் தலையிலோ, முகத்திலோ பட்டால் தலைவலி ஏற்படலாம்
* ஏசியை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்
* ஏசியின் குளிர்க்காற்று தசைகளை இறுகச்செய்து செயல்பட விடாது
* ஏசியின் அதிக குளிர் உங்களது உடல் சூட்டை குறைத்து தூங்க விடாமல் செய்யலாம்
* ஏசியால் உங்களது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து ஜலதோஷம் உள்ளிட்டவை ஏற்படலாம்

error: Content is protected !!