News June 4, 2024
INDIA கூட்டணி வெல்ல 42% வாய்ப்பு

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் NDA கூட்டணி 295 இடங்களிலும், INDIA கூட்டணி 231 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் வகையில், பாஜக கூட்டணிக்கு INDIA கூட்டணி கடும் போட்டியை அளித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA கூட்டணிக்கு 46%, INDIA கூட்டணிக்கு 42% வெற்றி வாய்ப்புள்ளதாக NDTV கணித்துள்ளது.
Similar News
News September 22, 2025
சி.வி.ராமன் பொன்மொழிகள்

*அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை, கடின உழைப்பு.
*ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிபுக்கான திறவுகோலாகும்.
*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது.
*ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் வளர்க்கப்படும் ஒரு யோசனையும் தொடங்குகிறது.
News September 22, 2025
நடிகர் – நடிகைகள் மீது அவதூறு பரப்பினால் சிறை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: *யூடியூப்பில் உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 3 மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும். *மன உளைச்சலுக்கு உள்ளான உறுப்பினருக்கு அந்த நபர் ₹3 லட்சம் மான நஷ்ட ஈட்டு வழங்க வேண்டும். *அவதூறு செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும்.
News September 22, 2025
வரலாற்றில் இன்று

➤1931 – எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்தநாள்.
➤1941 – உக்ரைனில் 6,000 யூதர்கள் நாஜி படையால் கொல்லப்பட்டனர்.
➤1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை அடைந்தது.
➤1965 – இந்திய-பாகிஸ்தான் போர் ஐநாவால் முடிவுக்கு வந்தது.
1995 – நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.