News May 6, 2024

41 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

கரூர் மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு பொது தேர்வில் 104 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 9086 தேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 41 பள்ளிகள் 100% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதில் 08 அரசு பள்ளிகளும், 03 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடங்கும் என கரூர் மாவட்ட கல்வி நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.31% லிருந்து 95.90% ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News November 19, 2024

கரூர் தலைப்பு செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கரூரில் நூல் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து
3.க.பரமத்தி அரசுப்பள்ளி கட்டுமான பணிகள் – கலெக்டர் ஆய்வு
4.ரேஷன் கடை நேர்முகத்தேர்வு அனுமதி சீட்டு வெளியீடு
5.புலியூர் அருகே டூவிலர் மோதி ஒருவர் படுகாயம்

News November 19, 2024

கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்

News November 19, 2024

ரேஷன் கடை நேர்முகத்தேர்வு அனுமதி சீட்டு

image

கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை காலிப்பணியிட நேர்முகத் தேர்வுக்கு அனுமதி சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்துள்ளார். தகுதியானவர்களுக்கு வரும் டிசம்பர் 2 முதல் 8 வரை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. அனுமதி சீட்டு https://drbkarur.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.