News October 24, 2024
4,08,636 பனை விதை நட்டு விழுப்புரம் முதலிடம்

தமிழகத்தில், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தில், இதுவரை 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் மாவட்டம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் மாவட்டம் இரண்டாமிடத்தையும், 828 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 25, 2025
விழுப்புரம்: POLICE லஞ்சம் கேட்டால் உடனே CALL!

விழுப்புரம் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
விழுப்புரத்தில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிச. 26) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News December 25, 2025
விழுப்புரம்: சாப்பாடு பரிமாறிய நபருக்கு அடி உதை!

விழுப்புரம்: அய்யனம்பாளையத்தைச் சேர்ந்த அருள்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி விழாவில் உணவு பரிமாறியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், ஸ்ரீமன் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அருள்குமார் போலீசார் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.


